வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக பெண் உள்பட 2 பேர் கைது


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2022 1:34 AM IST (Updated: 17 Feb 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

பெண் உள்பட 2 பேர் கைது

மதுரை,
மதுரை மாநகராட்சி 69-வது வார்டு தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சொக்கலிங்க நகர் 2-வது தெருவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக சீதாலட்சுமி (வயது 46), ஆல்பர்ட்இருதயராஜ் (68) ஆகியோரை 1,500 ரூபாயுடன் தி.மு.க. வேட்பாளர் மகன் பிடித்து பறக்கும் படை தாசில்தார் செல்வராஜனிடம் ஒப்படைத்தார். மேலும் இது தொடர்பாக பறக்கும்படை தாசில்தார் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story