போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது


போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2022 1:38 AM IST (Updated: 17 Feb 2022 1:38 AM IST)
t-max-icont-min-icon

போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆர்.எஸ்.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 56). இவர் ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் தொடர்பான வார்த்தைகளை பேசுவது, பாலியல் ஆசைகளை தூண்டுவது, பாலியல் சீண்டல் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் ெதரிவித்தனர். அவர்கள் மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் ஜெயராமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.


Next Story