தொழிலாளியை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை


தொழிலாளியை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 17 Feb 2022 1:42 AM IST (Updated: 17 Feb 2022 1:42 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

அரியலூர்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காங்கேயன்பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 42). கூலித்தொழிலாளியான இவரை, அதே பகுதி ஏரிக்கரை தெருவை சேர்ந்த கண்ணன் (52) என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த 13.6.2019 அன்று ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுதொடர்பாக விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகாலட்சுமி தீர்ப்பளித்தார். இதில், கண்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து கண்ணன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story