கும்பகோணத்தில் 3 கோவில்களில் ேதரோட்டம்
மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் 3 கோவில்களில் ேதரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
கும்பகோணம்:
மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் 3 கோவில்களில் ேதரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி மக திருவிழா
கும்பகோணம் சிவாலயங்கள் மற்றும் பெருமாள் கோவில்களில் மாசி மக திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர் ஆகிய 6 சிவன்கோவில்களில் மாசிமக பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம்
நேற்று மாலை ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சண்டிகேஸ்வரர் தேர் கோவிலின் தேரோடும் வீதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காசிவிஸ்வநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், கவுதமேஸ்வரர் கோவில் ஆகிய மூன்று சிவன் கோவில்களில் சாமி-அம்பாள் தேரில் எழுந்தருளினர். பின்னர் தேரோட்டம் மகாமக குளக்கரையில் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தீர்த்தவாரி
கொட்டையூர் கோடீஸ்வரசாமி கோவில், பாணபுரீஸ்வரர் கோவில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் ஆகிய 6 சிவன்கோவில்களில் இருந்து சாமி, அம்பாள் மகாமக குளக்கரையில் பகல் 12 மணிக்கு இன்று(வியாழக்கிழமை) எழுந்தருளுவர். பின்னர் மகாமக குளத்தில் அந்தந்த கோவில் அஸ்திரதேவருக்கு அபிஷேகம் நடைபெற்று, தீர்த்தவாரி நடைபெறுகிறது. அப்போது பக்தர்களும் புனித நீராடுவார்கள். அதனை தொடர்ந்து அகில பாரதீய சன்னியாசி சங்கம் மற்றும் தென்பாரத கும்பமேளா மகாமகம் அறக்கட்டளை சார்பில் இன்று மாலை 5 மணிக்கு மகாமக குளத்தில் மகா ஆரத்தி நடைபெறுகிறது.
Related Tags :
Next Story