ஓட்டல்களில் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்


ஓட்டல்களில் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்
x
தினத்தந்தி 17 Feb 2022 2:09 AM IST (Updated: 17 Feb 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததால் ஓட்டல்களில் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.

தஞ்சாவூர்:
கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததால் ஓட்டல்களில் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.
பல்வேறு கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3-வது அலை உச்சத்தை எட்டியபோது பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, கடைகள் திறப்பு நேரம் குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை ரத்து செய்யப்பட்டன. மேலும் கடைகள் திறப்பு நேரம் அதிகரிக்கப்பட்டது. இருந்தாலும் ஓட்டல்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது.
புதிய தளர்வுகள் அமல்
மேலும் தியேட்டர்களும் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கொரோனா தொற்று மேலும் குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஓட்டல்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகளில் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிடலாம் என புதிய தளர்வு அளிக்கப்பட்டது.
இந்த தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தன. தஞ்சை மாநகரில் உள்ள ஓட்டல்களில் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஓட்டல்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் 100 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.
தியேட்டர்கள்
தியேட்டர்களிலும் 100 சதவீத பார்வையாளர்கள் படம் பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. தஞ்சை மாநகரில் 7 தியேட்டர்கள் உள்ளன. இதேபோல் மாவட்டம் முழுவதும் கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 23 தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்கள் எல்லாம் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Next Story