60 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்


60 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Feb 2022 2:13 AM IST (Updated: 17 Feb 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே 60 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர், 
உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்வின் பிரைட் மேரி விருதுநகர்- சிவகாசி ரோட்டில் ஆனைக்குட்டம் அருகில் வாகன சோதனை மேற்கொண்டார். அந்த வழியாக வந்த ஒரு வேனை சோதனையிட்ட போது அந்த வேனில் 60 மூடை ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. மொத்தம் 2,400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதை வேனுடன் பறிமுதல் செய்ததுடன் வேனிலிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் வேன் டிரைவர் மதுரை அவனியாபுரத்தை  சேர்ந்த கற்பகராஜ் (வயது 28), வில்லாபுரத்தைச்சேர்ந்த பாரதிராஜா (28) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த வேன் உரிமையாளர் ஸ்டாலின் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


Next Story