யானை தந்தங்கள் பதுக்கலா?


யானை தந்தங்கள் பதுக்கலா?
x
தினத்தந்தி 17 Feb 2022 2:17 AM IST (Updated: 17 Feb 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் யானை தந்தங்கள் பதுக்கலா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அய்யனார் கோவில் சாலையில் வடக்கு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலய துணை இயக்குனர் திலீப்குமார் உத்தரவின் பேரில் ராஜபாளையம் வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத் கதிர்காமன், வனவர் குருசாமி மற்றும் வனகாப்பாளர்கள் ஆகியோர் அந்த தோப்பிற்கு சென்று சோதனை நடத்தினர். இதுதொடர்பாக ராஜபாளையத்தை சேர்ந்த முத்துராஜ் (வயது35) என்பவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் எனக்கு  இது யானை தந்தமா என தெரியாது என கூறினார். இதனால் வனத்துறையினர் கைப்பற்றியது யானை தந்தங்கள் தானா? என்பதை உறுதி செய்ய அவற்றை சென்னையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆய்வுக்கு பின்னர் தான் அது யானை தந்தமா அல்லது வேறு எதுவுமா என்பது ெதரியவரும். 


Next Story