தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் தேரோட்டம்


தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2022 2:28 AM IST (Updated: 17 Feb 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் தேரோட்ட திருவிழாவில் பக்தர்கள் திரண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவில் தேரோட்ட திருவிழாவில் பக்தர்கள் திரண்டு வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

மாசித்திருவிழா
பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மக பெருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் மண்டகப்படி தீபாராதனை, சுவாமி -அம்பாள் வீதி உலா ஆகியன நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தினமும் கோவிலுக்கு வந்து பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சுவாமி -அம்பாள் காலை 6 மணிக்கு தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காலை 9-30 மணிக்கு சுவாமி தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க, பஞ்ச வாத்தியங்கள் ஒலிக்க, பக்தர்களின் பக்தி கோஷத்துடன் தேர் நான்கு ரத வீதிகளிலும் சுற்றி 10-35 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது.இதன்பிறகு அம்மன் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இந்த தேரும் 4 ரத வீதிகளிலும் சுற்றி 10-45 மணிக்கு நிலையத்தை அடைந்தது. தேர்கள் நிலையத்தை அடைந்ததும் பக்தர்கள் கரவொலி எழுப்பி பக்தி கோஷமிட்டனர்.

கலந்து கொண்டவர்கள்
விழாவில் கோவில் தக்கார் சங்கர், உதவி ஆணையர் கோமதி, நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செந்தில்குமார், கோவில் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தேரோட்ட திருவிழாவையொட்டி தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் பயிற்சி சூப்பிரண்டு கிருஷ் யாதவ், துணை சூப்பிரண்டு மணிமாறன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story