காரில் மது பாட்டில்களை கடத்தியவர் கைது


காரில் மது பாட்டில்களை கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2022 2:28 AM IST (Updated: 17 Feb 2022 2:28 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் காரில் மதுபாட்டில்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், 
விருதுநகர் பாண்டியன் நகர் ரோசல்பட்டியை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (வயது 40). இவர் காரில் 288 மது பாட்டில்களை 2 பெட்டிகளில் விற்பனைக்கு கொண்டு சென்றார். அப்போது குமாரலிங்கபுரம் பஸ் நிறுத்தம் அருகே ஆமத்தூர் போலீசார், காரை சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் இருந்ததால் காருடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். 

Next Story