தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. முழுமையாக நிறைவேற்றவில்லை- ஈரோட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு


தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. முழுமையாக நிறைவேற்றவில்லை- ஈரோட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 Feb 2022 2:58 AM IST (Updated: 17 Feb 2022 2:58 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. முழுமையாக நிறைவேற்றவில்லை என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிப்ேபசினார்.

ஈரோடு
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. முழுமையாக நிறைவேற்றவில்லை என்று ஈரோட்டில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிப்ேபசினார். 
தேர்தல் பிரசாரம்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளாட்சி தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று அவர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் தனது அலுவலகத்தில் இருந்து காணொலி மூலமாக பிரசாரம் செய்து வருகிறார். அவரே தனது ஆட்சிக்கு 100-க்கு 100 மதிப்பெண் கொடுத்தும், நல்லாட்சி நடைபெறுவதாகவும் கூறி வருகிறார். மேலும் உள்ளாட்சியிலும் அவரது ஆட்சியே தொடரும் என்றும் சொல்லிக்கொள்கிறார். ஆனால் களத்தில் வந்து பார்த்தால்தான் மக்கள் கோபத்தில் உள்ளது தெரிகிறது.
நிறைவேற்றவில்லை
517 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்த தி.மு.க. அதில் 7 வாக்குறுதிகளை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.1,000 கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் குடும்பத் தலைவிகளின் கணக்கெடுப்பு பணி நடந்து வருவதாக சட்டமன்றத்தில் நிதி-அமைச்சர் கூறினார். குடும்பத் தலைவி யார்? என்று கணக்கெடுப்பதற்கே 8 மாதங்கள் ஆகிறதா?
8 மாதங்களாக ஒரு காதில் பூவை சுற்றி விட்டு, தற்போது மற்றொரு காதில் தி.மு.க.வினர் பூவை சுற்ற பார்க்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறினார்கள். ஆனால் தற்போது 73 சதவீதம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என்று அறிவித்து உள்ளது இந்த விடியல் அரசு.
இது ஒருபுறம் இருந்தாலும் மோடியின் ஆட்சி 8 ஆண்டுகளாக சிறப்பாக நடந்து வருவதை மக்கள் அறிவார்கள். நமது நாட்டு விஞ்ஞானிகள் மூலமாக தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது. இதுவரை 172 கோடி டோஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
விடியாத அரசு
இந்த விடியாத அரசு வழங்கிய 21 வகை பொங்கல் தொகுப்பில் ஒரு பொருட்களையாவது பயன்படுத்தும் வகையில் கொடுத்தார்களா?  முதல்-அமைச்சர் வழங்கிய மஞ்சள் பையின் விலை ரூ.60 என்றால் நம்பமுடிகிறதா?
 எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 
இந்த பிரசாரத்தின்போது மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து கனிராவுத்தர் குளம், ரங்கம்பாளையம், கொல்லம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்தார்.

Next Story