சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரியில் 148 இடங்களில் கண்காணிப்பு கேமரா
சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரியில் 148 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஈரோடு
சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரியில் 148 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
ஈரோடு மாநகராட்சியில் 59 வார்டுகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதைத்தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. வருகிற 22-ந்தேதி அங்கேயே வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்காக அங்கு 3 அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அதன் அருகே உள்ள 3 அறைகளில் தலா 14 மேஜைகள் வீதம் ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 அறைகளிலும் சுவரை ஒட்டிய பகுதியில் வேட்பாளர்களின் முகவர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து கட்டை, கம்பி மூலமான தடுப்பு வேலி அமைத்து உள்ளே ஓட்டு எண்ணிக்கை நடக்கும்.
148 கண்காணிப்பு கேமரா
இங்கு ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா என 3 அறைகளில் தலா 14 கேமராவும், ஒவ்வொரு அறையிலும் ஒட்டு மொத்த அறையையும் கண்காணிக்கும் வகையில் ஒரு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கும் அறை, எந்திரங்கள் கொண்ட பெட்டியை எடுத்து வரும் பாதைகள் மற்றும் கல்லூரி வளாக பகுதிகள் என மொத்தம் 148 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை அங்கேயும், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கண்காணிக்கும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கருங்கல்பாளையம் காமராஜர் பள்ளிக்கூடத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story