வாணியம்பாடியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது


வாணியம்பாடியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது
x
தினத்தந்தி 17 Feb 2022 5:07 AM IST (Updated: 17 Feb 2022 5:07 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் காவல் துறை சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்க கொடி அணிவகுப்பு நடந்தது. வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கொடி அணிவகுப்பு கோணாமேடு பகுதியில் இருந்து புறப்பட்டு காதர்பேட்டை, ஜின்னா சாலை, சி.எல்.சாலை, பஸ் நிலையம் வழியாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பாக முடிவடைந்தது.

இதில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரியா சக்தி, இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சாந்தி, ராஜாராம், செல்லப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story