திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்


திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்
x
தினத்தந்தி 17 Feb 2022 5:07 AM IST (Updated: 17 Feb 2022 5:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1,200 போலீசார் ஈடுபட இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1,200 போலீசார் ஈடுபட இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிரகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தேர்தலை சுமுகமாவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 347 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 88 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

1,200 போலீசார்

தேர்தல் பணியில் உள்ளூர் போலீசார், அதிரடிபடை போலீசார், ஊர்க்காவல் படையினர் என 1,200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 28 நடமாடும் போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வாக்குபதிவு எந்திரங்களை வாக்குபதிவு மையங்களுக்கு எடுத்து செல்வது, வாக்குபதிவு முடிந்தவுடன் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு  எடுத்து செல்வார்கள். இதனை கண்காணிக்க 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் அரசியல் கட்சியினருடன் எந்தவிதபாகுபாடும் காட்டக்கூடாது. தேர்தல் பணியில் அலட்சியம் காட்டமால் முழுமனதுடன் ஈடுபட வேண்டும். வாக்குபதிவு அன்று பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முககவசம் அணிந்து வந்து வாக்களிக்க வேண்டும். மாலை நேரங்களில் மொத்தமாக வருவதை தவிர்க்க வேண்டும்.

மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்தலை நடத்திட பொதுமக்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story