திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 17 Feb 2022 6:10 AM IST (Updated: 17 Feb 2022 6:10 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி,

அறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன், தினமும், ஓரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்த நிலையில் 9-வது நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில் உற்சவர் முருகபெருமானுக்கும், வள்ளிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி மூலவர் முருகபெருமான் தங்க கவசம் அணிந்து தங்கவேலுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.

Next Story