வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Feb 2022 6:27 AM IST (Updated: 17 Feb 2022 6:27 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி- சித்தூர் சாலையில் விஜய் என்பவர் புதிதாக அடுக்குமாடி வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டில் 20 நாட்களுக்கு மேலாக வேலூர் மாவட்டம் அம்மூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் (வயது 30) கட்டிட வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு வந்த கட்டிட மேஸ்திரி டில்லி என்பவர் பொருட்களை எடுப்பதற்கு மாடிக்கு சென்றார். அங்கு மணி பிணமாக தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.

அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உரிமையாளர் விஜயிடம் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து விஜய் திருத்தணி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை, மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து பல்வேறு கோணங்களில் திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story