திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை


திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 17 Feb 2022 6:27 AM IST (Updated: 17 Feb 2022 6:27 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம், குச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் தனது மூத்த மகளை மார்த்தாண்டத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

பிரசவத்திற்காக மகள் கூடப்பாக்கம் வந்திருந்தார். குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆனதையடுத்து மகளையும், குழந்தையையும் மார்த்தாண்டத்தில் கொண்டு சென்று விடுவதற்காக குடும்பத்துடன் கடந்த 13-ந்தேதி மார்த்தாண்டம் சென்றார்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து செல்வராஜ் வெள்ளவேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

Next Story