தர்மபுரி மாவட்டம் முழுவதும் 22 மாதங்களுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறப்பு குழந்தைகள் உற்சாகம்


தர்மபுரி மாவட்டம் முழுவதும் 22 மாதங்களுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறப்பு குழந்தைகள் உற்சாகம்
x
தினத்தந்தி 17 Feb 2022 6:28 AM IST (Updated: 17 Feb 2022 6:28 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 22 மாதங்களுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் உற்சாகம் அடைந்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் முழுவதும் 22 மாதங்களுக்கு பிறகு நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் உற்சாகம் அடைந்தனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா முதல் அலை மற்றும் 2-வது அலை முடிந்து 3-வது அலையும் முடிவுக்கு வந்துள்ள நிலையில் படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைய தொடங்கியதையடுத்து மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் பிப்ரவரி மாதம் 16-ந் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள மொத்தம் 72 மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
குழந்தைகள் உற்சாகம்
22 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் குழந்தைகள் உற்சாகத்துடன் வந்தனர். அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளின் சார்பில் ஆசிரியைகள் சாக்லெட் மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வகுப்பறைகளுக்கு வந்த குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விளையாடி கொண்டிருந்தனர். ஒரு சில குழந்தைகள் பள்ளிக்கு வந்தது முதல் அழுது கொண்டே இருந்தனர். பள்ளி திறந்து முதல் நாள் என்பதால் குழந்தைகளுக்கு பாடம் ஏதும் நடத்தப்படவில்லை.

Next Story