தர்மபுரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி


தர்மபுரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 17 Feb 2022 6:29 AM IST (Updated: 17 Feb 2022 6:29 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பதற்றமான 28 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி தர்மபுரியில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் பதற்றமான 28 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி தர்மபுரியில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நடந்தது.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 190 வார்டுகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் 801 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலை முன்னிட்டு 70 வாக்குச்சாவடி மையங்களில் 228 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 28 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதுடன் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க 28 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
பயிற்சி
இவர்களுக்கான பயிற்சி முகாம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இந்த பயிற்சி முகாமில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் நுண்பார்வையாளர்கள் முகவர்களின் வருகை, வாக்குச்சாவடியில்  அடிப்படை வசதிகள், அலுவலர்களின் செயல்பாடு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு ஆகியவற்றை பார்வையிட வேண்டும். வாக்குப்பதிவு விவரங்கள், வாக்குச்சாவடியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அது குறித்த விவரங்களை படிவம் 1 மற்றும் 2-ல் தேர்தல் நுண்பார்வையாளர்கள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
பணியாற்ற வேண்டும்
தேர்தல் நுண்பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்தின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி இத்தேர்தலை சிறப்பாக நடத்த ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
 முகாமில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) மாரிமுத்து ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் தேர்தல் நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story