பேரிகை அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது-டிரைவர், கண்டக்டர் உள்பட 10 பேர் காயம்


பேரிகை அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது-டிரைவர், கண்டக்டர் உள்பட 10 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Feb 2022 4:17 PM IST (Updated: 17 Feb 2022 4:17 PM IST)
t-max-icont-min-icon

பேரிகை அருகே தாறுமாறாக ஓடிய தனியார் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் இருந்து சூளகிரி நோக்கி இன்று தனியார் பஸ் ஒன்று சென்றது. இதில் 25 பயணிகள் இருந்தனர். சூளகிரியை சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்பவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். பாலக்கோட்டை சேர்ந்த சுரேஷ் (36) கண்டக்டராக பணியில் இருந்தார்.
இந்த நிலையில் அத்திமுகம் வளைவில் கோழிப்பண்ணை பகுதியில் பஸ் திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் கார்த்திக், கண்டக்டர் சுரேஷ் மற்றும் பயணிகள் 8 பேர் காயம் அடைந்தனர். 
மேலும் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்தது. விபத்தில் காயமடைந்தவர்கள் சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story