தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு மாற்று உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன-கலெக்டர் தகவல்


தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்த வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு மாற்று உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2022 4:26 PM IST (Updated: 17 Feb 2022 4:26 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட எந்திரங்களுக்கு மாற்று எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி:
வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட எந்திரங்களுக்கு மாற்று எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என கலெக்டர் தெரிவித்தார்.
அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி பேசினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் முருகேசன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ஜெய்சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு நிறைவுற்று, வாக்குச்சீட்டை வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. 
அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதடைந்து தேர்தலுக்கு பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள எந்திரங்களுக்கு பதிலாக 20 சதவீதம் இருப்பில் உள்ள மாற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
 21 கட்டுப்பாட்டு கருவிகள்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக முதல் தளத்தில் இருப்பு அறையில் இருந்து 5 வாக்குப்பதிவு எந்திரங்கள், 21 கட்டுப்பாட்டு கருவிகள் பொறியாளர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Next Story