கிருஷ்ணகிரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு
கிருஷ்ணகிரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருட்டு போனது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஆலப்பட்டி அருகே உள்ள வெலகலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நித்யா (வயது 23). இவர் மாரிகவுண்டனூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றார். பிறகு மீண்டும் ஊருக்கு கிருஷ்ணகிரியில் இருந்து வெலகலஹள்ளி கிராமத்திற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
அந்த பஸ் கிருஷ்ணகிரியில் ஒரு சினிமா தியேட்டர் அருகில் வந்து கொண்டிருந்த போது அருகில் இருந்த பெண் ஒருவர் நித்யாவின் கைப்பையில் வைத்திருந்த 7½ பவுன் தங்க நகையை திருடிச்சென்றார். இந்த நிலையில் நகை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நித்யா, இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story