வாக்குப்பதிவை கண்காணிக்க 50 நுண்பார்வையாளர்கள் நியமனம்


வாக்குப்பதிவை கண்காணிக்க 50 நுண்பார்வையாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 17 Feb 2022 5:12 PM IST (Updated: 17 Feb 2022 5:12 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவை கண்காணிக்க 50 நுண்பார்வையாளர்கள் நியமனம்

்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் வினீத், தேர்தல் பார்வையாளர் நிர்மல்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் வினீத் பேசியதாவது
திருப்பூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவுக்கு 50 நுண்பார்வையாளர்கள், வாக்கு எண்ணும் மையங்களில் பணியாற்ற 36 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சுயேச்சையாக, சுதந்திரமாக, நியாயமான தேர்தலை நடத்துவதில் நுண்பார்வையாளர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. தேர்தல் தூய்மையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே நுண்பார்வையாளர்கள் பொதுப்பார்வையாளரின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையின் கீழ் செயல்பட வேண்டும்.
விதிமீறல்
நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரத்துக்கு முன்னதாகவோ அல்லது வாக்குப்பதிவின் முந்தைய நாள் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். எந்வித வித விதிமீறல் இல்லாமல் தேர்தல் நடைபெறுவதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவுக்கு தயாராக இருப்பதை நுண்பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளில் தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை பொதுப்பார்வையாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அழியாத மை தடவுதல், வாக்களிக்கும் ரகசியம், வாக்குச்சாவடி முகவர்களின் நடத்தை, வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்ட பெட்டிக்கு சீல் வைப்பது மற்றும் புகார்களை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்  சுந்தரம் மற்றும் நுண்பார்வையாளர்கள், தொடர்புடைய அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


Next Story