அரவைக்கு தயார் நிலையில் கரும்புகள்


அரவைக்கு தயார் நிலையில் கரும்புகள்
x
தினத்தந்தி 17 Feb 2022 5:21 PM IST (Updated: 17 Feb 2022 5:21 PM IST)
t-max-icont-min-icon

அரவைக்கு தயார் நிலையில் கரும்புகள்

மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில் கரும்பு பயிர்கள் வளர்ந்து அமராவதி ஆலையின் அரவைக்கு தயாராக உள்ளது.
கரும்பு சாகுபடி
 மடத்துக்குளம் ஆயக்கட்டு பகுதியில் கடந்த ஆண்டு 4 ஆயிரம் ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி நடந்துள்ளது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை அரவை பருவம் ஆகும். 
இதற்காக கணியூர்,குமரலிங்கம், நெய்க்காரப்பட்டி, பழனி மற்றும் ஆலை பகுதியிலுள்ள விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. நடப்பாண்டு அரவைக்கு இந்த பகுதி விவசாயிகளிடம் பல மாதங்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 அறுவடை
 அரவை மார்ச் மாதத்தில் தொடங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் 2022-ஆம் ஆண்டு அரவைக்கு ஆயக்கட்டு பகுதியில் கரும்பு பயிர்கள் வளர்ந்து உள்ளன. 
சில இடங்களில் உடனடியாக அறுவடை செய்யும் பக்குவத்திலும் சில இடங்களில் சில வாரங்கள் கடந்து அறுவடை செய்யும் பக்குவத்திலும் பயிர் வளர்ச்சி உள்ளது.
விவசாயிகள் எதிர்பார்த்தபடி அடுத்த மாதம் அரவை தொடங்கினால், ஆலையின் உத்தரவுக்கு தகுந்தபடி அறுவடை செய்ய தகுந்த வகையில் சீரான காலஇடைவெளியில் கடந்தாண்டு சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் வளர்ந்துள்ளன.

Next Story