வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் நாளை பொதுவிடுமுறை: கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அடங்கிய பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களுக்கும் முழு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story