திருச்செந்தூர் கோவிலில் ரூ 171 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்: இந்து அறநிலையத்துறை செயலாளர் ஆய்வு
திருச்செந்தூர், பிப்.18- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.171 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது, இந்த பணிகளை அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.171 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகளை அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.
ரூ.171 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு டெல்லி வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் உபயமாக வழங்கும் ரூ.171 கோடி நிதியின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோவில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இந்த பணிகள் தொடங்கப்படவுள்ள இடங்களை இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவில் உள்பிரகாரம், கோவில் வளாகம், வடக்கு மற்றும் தெற்கு டோல்கேட், நாழிக்கிணறு பஸ்நிலையம், கடற்கரை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் ரோஜாலி சுமதா, வெங்கடேஷ், திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன், கோவில் தக்கார் பிரதிநிதியும் ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், மற்றும் வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் நிறுவன என்ஜினீயர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story