நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும் பட்டியலில் இறந்த வாக்காளருக்கு குறியீடு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகளுக்கு வழங்கப்படும் வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர் குறித்து குறியீடு செய்யப்படுகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் 8 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வாகினர். எனவே மீதமுள்ள 478 பதவிகளுக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 745 ஆண்கள், 3 லட்சத்து 16 ஆயிரத்து 60 பெண்கள், 75 திருநங்கைகள் என மொத்தம் 6 லட்சத்து 12 ஆயிரத்து 880 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக மாவட்டம் முழுவதும் 737 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதேபோல் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் 30 வகையான பொருட்கள், 27 படிவங்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரித்து வைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் இன்று (வெள்ளிக்கிழமை) மண்டல அலுவலர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன் சேர்த்து வாக்குச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இறந்தவர்களுக்கு குறியீடு
இதோடு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் பட்டியலும் வழங்கப்படுகிறது. இதற்காக 737 வாக்குச்சாவடிகள் வாரியாக வாக்குச்சாவடி பட்டியல் தயாராக உள்ளது. இதற்கிடையே தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இறந்த வாக்காளர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. மேலும் இறந்த வாக்காளர்களை அடையாளப்படுத்தும் வகையில், வாக்குச்சாவடிக்கு வழங்கப்படும் வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் மாநகராட்சியில் 183 வாக்குச்சாவடிகளிலும் வழங்கப்படும் வாக்காளர் பட்டியலில் நேற்று இறந்த வாக்காளர்கள் குறித்து குறியீடு செய்யப்பட்டது. இதற்காக வாக்காளரின் புகைப்படத்தின் அருகில் முத்திரையிடப்பட்டது. இதன்மூலம் இறந்த வாக்காளர்கள் பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
----
படம்

Related Tags :
Next Story