ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு


ஆதித்தனார் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
x
தினத்தந்தி 17 Feb 2022 6:45 PM IST (Updated: 17 Feb 2022 6:45 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்றம் சார்பில், ‘உடலே மருத்துவர்’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. ஆரோக்கிய மன்ற இயக்குனர் கவிதா வரவேற்று பேசினார். வேதியியல் துறை தலைவர் அன்பரசன் வாழ்த்தி பேசினார்.
தேனி மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அக்குபஞ்சர் டாக்டர் கிருஷ்ணவேணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘நாம் மரபுசார் வாழ்வியலுக்கு திரும்பினால்தான் நோயற்ற வாழ்வை முற்றிலுமாக சாத்தியப்படுத்த முடியும். நோய்கள் வராமல் தடுத்திட நமது உடலே முதல் மருத்துவராக திகழ்கிறது’ என்று கூறினார். பின்னர் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.  பேராசிரியை தீபாராணி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மகேந்திரன் வழிகாட்டுதலின்பேரில், ஆரோக்கிய மன்ற மாணவ செயலாளர் முத்து கணேஷ், மன்ற உறுப்பினர் ராஜபூபதி ஆகிேயார் செய்து இருந்தனர்.

Next Story