மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்: அரசு ஊழியர் பலி
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மத்திய அரசு ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் மத்திய அரசு ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.
மத்திய அரசு ஊழியர்
தூத்துக்குடி கனநீர் ஆலை குடியிருப்பைச் சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 35). இவர் மத்திய அரசுக்கு சொந்தமான சிர்கோனியம் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் அவர் நிறுவனத்தில் இரவு பணிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் அவரது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தது. அதனை அடுத்து அப்பாஸ் நிறுவனத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
வேன் மோதியது
பொட்டல்காடு விலக்கு அருகே வந்தபோது, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக இவரது மோட்டர்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயங்களுடன் சாலையில் ரத்த வெள்ளதில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீசார் விசாரணை
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story