கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி


கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி
x
தினத்தந்தி 17 Feb 2022 8:05 PM IST (Updated: 17 Feb 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

கோதண்டராமர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி

வடுவூர்:-

வடுவூர் கோதண்டராமர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சமேதராக வில்லேந்திய திருக்கோலத்தில் புறப்பட்ட கோதண்டராமர் பல்வேறு வீதிகளின் வழியாக வலம் வந்து கோவிலின் பின்புறம் உள்ள சரயூ புஷ்கரணி தெப்பகுளத்தில் எழுந்தருளினார். அங்கு தீர்த்த பேரருக்கு பால், மஞ்சள், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து தீர்த்தவாரி நடந்தது. பின்னர் தேரடி ஆஞ்சநேயருக்கு சடாரி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story