திருவாரூரில், தேர்தல் பார்வையாளர் ஆய்வு
திருவாரூரில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் பார்வையாளர் ஆனந்த்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்:-
திருவாரூரில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் பார்வையாளர் ஆனந்த்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் மொத்தம் 50 ஆயிரத்து 245 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் வாக்குப்பதிவிற்காக ஆண்களுக்கான வாக்குச்சாவடிகள் 27, பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் 27, 3 பொது வாக்குச்சாவடிகள் என 57 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 3 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு உள்ளது.
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தும் மை, வாக்காளர் பட்டியல் விவரம், எழுது பொருட்கள் உள்ளிட்ட 80 வகையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதை தேர்தல் பார்வையாளர் ஆனந்த்மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாக்குச்சாவடியில் பணிபுரியும் மண்டல அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபாகரன் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story