கேத்தி பேரூராட்சி 1 வது வார்டு மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு


கேத்தி பேரூராட்சி 1 வது வார்டு மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2022 8:51 PM IST (Updated: 17 Feb 2022 8:51 PM IST)
t-max-icont-min-icon

அடிப்படை வசதிகள் இல்லாததால் கேத்தி பேரூராட்சி 1-வது வார்டு மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பைகமந்து கிராமம் ஆகும். இந்த பகுதியில் 500 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தராததால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தீர்மானித்து அறிவித்து உள்ளனர்.

 இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, பைகமந்து கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை, பஸ் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. கேத்தி பேரூராட்சி அலுவலகம் செல்ல 25 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. பைகமந்து கிராமத்தில் இருந்து 4 பஸ்கள் மாறி பேரூராட்சி அலுவலகத்துக்கு செல்லும் அவலநிலை காணப்படுகிறது. 

மனு அளிக்கவும், சான்றிதழ்கள் பெறவும் சிரமமாக உள்ளது. பைகமந்து கிராமத்தை அருகே உள்ள தொட்டபெட்டா ஊராட்சியோடு இணைக்க வேண்டும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டரிடம் மனு அளித்தோம்.

 நகர்ப்புற கிராமத்தில் இருந்து ஊரக கிராமத்துக்கு மாற்றி தர கோரி தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர். இதையடுத்து வருவாய்த்துறையினர், போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story