நீலகிரி மாவட்டத்தில் பழுதான 15 எந்திரங்கள் மாற்றம்


நீலகிரி மாவட்டத்தில் பழுதான 15 எந்திரங்கள் மாற்றம்
x
தினத்தந்தி 17 Feb 2022 8:55 PM IST (Updated: 17 Feb 2022 8:55 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பழுதான 15 எந்திரங்கள் மாற்றப்பட்டன.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் பழுதான 15 எந்திரங்கள் மாற்றப்பட்டன. 

எந்திரங்கள் பழுது

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால் 491 வாக்குப்பதிவு எந்திரங்கள், 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த எந்திரங்களில் வார்டு வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி கடந்த 14-ந் தேதி முடிந்தது. பணியின்போது ஊட்டி நகராட்சியில் 3 கட்டுப்பாட்டு எந்திரங்கள், ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. 

சீல் அகற்றம்

மொத்தத்தில் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் 12 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பழுதடைந்த எந்திரங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. 

இந்தநிலையில் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் காந்திராஜ் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டது. 

எந்திரங்கள் மாற்றம்

தொடர்ந்து பழுதடைந்த 4 எந்திரங்கள் வெளியே எடுக்கப்பட்டு, மாவட்ட பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன. அதற்கு பதிலாக 4 எந்திரங்கள் ஒதுக்கப்பட்டு, நகராட்சி பாதுகாப்பு அறையில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. 

அதேபோல் மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் பழுதடைந்த எந்திரங்கள் மாற்றி மொத்தம் 15 எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. அந்த பழுதான எந்திரங்கள் மாவட்ட பாதுகாப்பு அறைக்கு பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. 


Next Story