வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆணையாளர் சாருஸ்ரீ ஆய்வு
தூத்துக்குடியிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆணையாளர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாருஸ்ரீ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story