நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க300 பேருக்கு தபால் வாக்கு அனுப்பி வைப்பு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க300 பேருக்கு தபால் வாக்கு அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 17 Feb 2022 8:59 PM IST (Updated: 17 Feb 2022 8:59 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க 300 பேருக்கு தபால் வாக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க 300 பேருக்கு தபால் வாக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 

தபால் வாக்கு

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 15 உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 1,980 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். 

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்களிக்க தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்தனர். அவர்களுக்கு தபால் மூலம் தபால் வாக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் தபால் வாக்கு செலுத்த 379 பேர் விண்ணப்பித்தனர். இதுவரை 300 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சியில் 64 பேருக்கு அனுப்பப்பட்டது. 

பெட்டியில் போடலாம்

ஊட்டி நகராட்சி உள்பட 15 உள்ளாட்சி அமைப்புகளில் தபால் வாக்குகளை பெற பெட்டி வைக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் பெட்டி பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது. 

தபால் வாக்கு பெற்றவர்கள் வருகிற 22-ந் தேதி காலை 8 மணி வரை வாக்கு செலுத்தலாம். அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக சென்று பெட்டியில் போடலாம் என்றனர். 


Next Story