லாரிக்கு தீ வைத்த மர்ம கும்பல்
லாரிக்கு மர்ம கும்பல் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அடுத்துள்ள கலெக்டர் பங்களா குடியிருப்புக்கு முன்புள்ளது சிவா சாலை. இந்த சாலையில் தனியார் வாகன பார்க்கிங் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பார்க்கிங்கில் பிளைவுட் சீட்டுகளுடன் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. பிளைவுட் சீட்டுடன் இருந்த லாரியை மர்ம கும்பல் ஒன்று நேற்று தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பியுள்ளது. இதனை கண்ட சம்பந்தப்பட்ட பார்க்கிங் பணியாளர்கள் உடனடியாக லாரியில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் கொண்டு அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து பார்க்கிங் உரிமையாளர் மாதவன் (வயது 45) கொடுத்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரிக்கு தீவைத்து விட்டு தலைமறைவாகி உள்ள மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story