கணவன்-மனைவியை கைது செய்யக்கோரி சாலை மறியல்
நாகூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய கணவன்-மனைவியை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
நாகூர்:
நாகூரை அடுத்த கொட்டாரக்குடி ஊராட்சிமன்ற தலைவராக ராஜீவ்காந்தி இருந்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜீவ்காந்தி வீட்டுக்கு அவர் தனது மனைவியுடன் சென்று ராஜீவ்காந்தி மற்றும் அவருடைய மனைவி சுமித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் கொட்டாரக்குடி - கங்களாஞ்சேரி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய கணவன்-மனைவியை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ்காந்தி கொடுத்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
Related Tags :
Next Story