பூங்காவில் பிணமாக கிடந்த சலவை தொழிலாளி
வேதாரண்யம் கடற்கரை பூங்காவில் சலவை தொழிலாளி பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கடற்கரை பூங்காவில் சலவை தொழிலாளி பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சலவை தொழிலாளி
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி கீழ்பாதி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது60). சலவைத் தொழிலாளி. இவர் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கீழவெளி பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
சுப்பிரமணியன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 16-ந்தேதி மாலை கடைவீதிக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் திரும்பி வரவில்லை.
பிணமாக கிடந்தார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வேதாரண்யம் கடற்கரை பூங்கா அருகே சுப்பிரமணியன் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சுப்பிரமணியனின் மனைவி கனகவள்ளி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story