திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு


திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 17 Feb 2022 11:10 PM IST (Updated: 17 Feb 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்கு ஏற்பாடு

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் நகராட்சி தேர்தலை முன்னிட்டு நகரசபை ஆணையர் கீதா வார்டு வாரியாக நேரில் சென்று பார்வையிட்டு முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவதாக கிடைத்த புகாரையொட்டி சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள், ஊழியர்களுடன் தேர்தல் முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் நகராட்சி அலுவலகத்தில் தபால் ஓட்டு போடுவதற்காக ஓட்டு பெட்டி வைத்து சீல் வைக்கும் பணியை அவர் பார்வையிட்டார். தபால் ஓட்டுப்போடுவதை பதிவு செய்ய ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story