முதியவரிடம் நூதன முறையில் ரூ.30 ஆயிரம் திருட்டு
திருமருகல் அருகே முதியவரிடம் நூதன முறையில் ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 88) விவசாயி.இவர் சம்பவத்தன்று திட்டச்சேரி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.30 ஆயிரத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை ஒரு பையில் போட்டு கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்த அவர், அந்த பணப்பையை தனது மோட்டார் சைக்கிளில் மாட்டி வைத்துள்ளார். அப்போதுஅங்கு வந்த மர்ம நபர்கள் 10 ரூபாய் நோட்டுகளை கீழே போட்டு விட்டு, ராமதாசிடம் உங்கள் பணம் கீழே விழுந்து விட்டது என தெரிவித்துள்ளனர். உடனே அவர் கீழே கிடந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமதாஸ், இதுகுறித்து திட்டச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து முதியவரிடம் நூதன முறையில் ரூ.30 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story