பணம்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் கைது


பணம்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2022 11:22 PM IST (Updated: 17 Feb 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

பணம்பட்டுவாடா செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

திருப்பரங்குன்றம், 
திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விப்பட்டி பகுதியில் மதுரை மாநகராட்சியின் 93, 94,95 96 97, 98, 99 ஆகிய வார்டுகள் அமைந்துள்ளன. இதில் 98-வது வார்டில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பறக்கும் படைக்கு ரகசிய தகவல்கள் சென்றதாக தெரிகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி தனிதாசில்தார் இந்திரா காந்தி தலைமையில் ஏட்டுக்கள் முத்துகிருஷ்ணன், பிரமிளா மற்றும் குமார் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் 98-வதுவார்டு முழுவதுமாக ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்த வார்டில் உள்ள கீழத்தெருவில் அதி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வடக்கு பண்டிதர் தெருவைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ராம்குமார் (வயது 42) பணம் பட்டுவாடா செய்ததாக  பறக்கும் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அவரிடம் இருந்து ரூ.21 ஆயிரத்து 100-ஐபறிமுதல் செய்தனர். மேலும் அவரை திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு, அழைத்து சென்று விசாரணை செய்தனர். 

Related Tags :
Next Story