வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா; தி.மு.க. பிரமுகர் சிக்கினார்


வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா; தி.மு.க. பிரமுகர் சிக்கினார்
x
தினத்தந்தி 17 Feb 2022 11:28 PM IST (Updated: 17 Feb 2022 11:28 PM IST)
t-max-icont-min-icon

தொண்டியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தி.மு.க. பிரமுகர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 500 தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொண்டி, 

தொண்டியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக தி.மு.க. பிரமுகர் சிக்கினார். அவரிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 500 தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பணம் பட்டுவாடா

தொண்டி பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுகிறது.இதையொட்டி 9-வது வார்டில் ஓடாவி தெரு பள்ளிவாசல் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜஸ்டின் பெர்னாண்டோ தலைமையிலான பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துகொண்டிருந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் மகன் சசிகுமார்(வயது 45) என்பவரை பிடித்தனர். 

தி.மு.க. பிரமுகர் சிக்கினார்

அவரிடம் இருந்து ரூ.22,500 பறிமுதல் செய்தனர். பிடிபட்ட சசிகுமார் தி.மு.க.வை சேர்ந்த பிரமுகர் ஆவார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.
அதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் தொண்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வராஜிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

Next Story