கச்சிராயப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் மாணவர்களிடையே திடீர் மோதல்


கச்சிராயப்பாளையம் அருகே  ஓடும் பஸ்சில் மாணவர்களிடையே திடீர் மோதல்
x
தினத்தந்தி 17 Feb 2022 11:30 PM IST (Updated: 17 Feb 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் மாணவர்களிடையே திடீர் மோதல் பதற்றம் போலீஸ் குவிப்பு


கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் அருகே அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும், பொன்பரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும் கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.  நேற்று மாலையில் வகுப்புகள் முடிந்ததும் இரு கிராமங்களை சேர்ந்த மாணவர்களும் கள்ளக்குறிச்சியில் இருந்து பொன்பரப்பட்டு கிராமத்துக்கு செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது வழியில் அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அவர்களை பஸ்சில் இருந்த பயணிகள் சமாதானம் செய்ய முயன்றனர்.  இதையடுத்து டிரைவர் பஸ்சை கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தினார். உடனே போலீசார் இரு தரப்பு மாணவர்களையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் இரு கிராமங்களிலும் பதற்றம் நிலவி வருவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story