வேர்க்கடலை செடிகளை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் புரடீனியா புழுக்கள்


வேர்க்கடலை செடிகளை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் புரடீனியா புழுக்கள்
x
தினத்தந்தி 17 Feb 2022 11:38 PM IST (Updated: 17 Feb 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் வேர்க்கடலை செடிகளை புரடீனியா புழுக்கள் தாக்கி உள்ளதால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு, அரசு காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் வேர்க்கடலை செடிகளை புரடீனியா புழுக்கள் தாக்கி உள்ளதால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு, அரசு காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேர்க்கடலை சாகுபடி
கொள்ளிடம் சுற்றுவட்டார கிராமங்களான புளியந்துறை, தாண்டவன்குளம், தற்காஸ், பழையபாளையம், வேட்டங்குடி, இருவக்கொள்ளை, எடமணல், வழுதலை குடி, ஆலங்காடு ஆகிய பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வேர்க்கடலை சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்பொழுது பெய்த மழை வேர்க்கடலைக்கு ஏதுவாக அமைந்துள்ளது. 
கடந்த வடகிழக்கு பருவ மழையினால் வேர்கடலை செடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலையில் இருந்தனர். பின்னர் மறு சாகுபடி செய்து வேர்கடலை சாகுபடியை தொடங்கினர். வேர்க்கடலை சாகுபடி மொத்த நாட்கள் 90. ஆனால் தற்போது 60 நாள் பயிராக உள்ளது. இதனால் வேர்கடலை அறுவடை தாமதமாக நடைபெறும் நிலை உள்ளது. 
புரடீனியா புழுக்கள் தாக்குதல்
இதுகுறித்து புளியந்துறை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், கடந்த வடகிழக்கு பருவ மழையினால் வேர்க்கடலை சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறு சாகுபடி செய்து தற்போது வேர்கடலை செடிகளை பராமரித்து வருகிறோம். வேர்க்கடலை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. 
தற்போது சாகுபடி செய்யப்பட்ட வேர்க்கடலை செடிகளுக்கு களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது பெய்த மழை வேர்க்கடலை செடிகளுக்கு ஏற்றதாக உள்ளது. 
வேர்கடலையில் தற்போது புரடீனியா புழுக்கள் தாக்குதல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். அதனை கட்டுப்படுத்த மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு வேர்க்கடலை சாகுபடி செய்த விவசாயிகள் அனைவருக்கும் காப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story