கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு:தந்தத்தால் செய்த செவ்வக வடிவ பகடைக்காய் முதன்முறையாக கிடைத்தது
கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வின் போது தந்தத்தால் செய்த செவ்வக வடிவ பகடைக்காய் முதன்முறையாக கிடைத்துள்ளது. பாசிமணிகளும் வெளிவந்தன.
திருப்புவனம்,
கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வின் போது தந்தத்தால் செய்த செவ்வக வடிவ பகடைக்காய் முதன்முறையாக கிடைத்துள்ளது. பாசிமணிகளும் வெளிவந்தன.
8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த 11-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அங்கு குழி தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கீழடியில் பணிகள் நடைபெற்ற போது, 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 2 பச்சை நிறமும், 2 ஊதா நிறத்திலும் உள்ளன.
பகடைக்காய் கண்டெடுப்பு
தொடர்ந்து குழி தோண்டிய போது நேற்று மாலையில் செவ்வக வடிவில் ஒரு பொருள் கிடைத்தது. அதனை ஆய்வு செய்த போது, அது யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் என தெரியவந்துள்ளது.. இதுவரை தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கன சதுர வடிவத்தில்தான் பகடைக்காய் கிடைத்து வந்தன.
தற்போது நடந்த கீழடியில், முதன்முறையாக ெசவ்வக வடிவிலான தந்தத்தாலான பகடைக்காய் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூலிலும் பதிவிட்டு உள்ளார்.
தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருவதால் பழங்கால பொருட்கள் இனி ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story