வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தேவகோட்டை அருகே வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
காரைக்குடி,
தேவகோட்டை அருகே வாகைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26).இவர் கடந்த 8 ஆண்டுகளாக கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் சிறை சென்றுள்ளார். இந்நிலையில் மற்றொரு வழக்கில் தேடப்பட்டு வந்த ஆனந்தை கடந்த டிசம்பர் மாதம் தேவகோட்டை போலீசார் கைது செய்து அவரை மதுரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆனந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் பரிந்துரை செய்தார். மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் சிறையில் உள்ள ஆனந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
Related Tags :
Next Story