வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ‘திடீர்’ ஆய்வு
சேத்துப்பட்டு-போளூர் சாலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்திற்கு கலெக்டர் முருகேஷ் திடீரென வந்தார். பின்னர் அவர், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து சேத்துப்பட்டு-போளூர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்கும் பாதுகாப்பு அறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விஜயராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், சேத்துப்பட்டு பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரபாபு, தேசூர் பேருராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயந்தி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மணி, சூசை ஜெயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ், மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story