வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கு பயிற்சி


வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கு பயிற்சி
x

திருப்பத்தூரில் வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா. 

மாவட்ட தேர்தல் பார்வையாளர் எம்.பிரதீப்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர்கள் கூறியதாவது:-

மாவட்டத்தில் நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவும்,  22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அனைவரும் தேர்தல் நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்றிட வேண்டும்.

மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் சரியாக சீல் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், வரிசை எண்கள் சரியாக உள்ளதா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தங்களின் பணிகள் குறித்த சந்தேகங்களை இங்கேயே தெளிவுப்படுத்திக்கொள்ள வேண்டும். தபால் வாக்குச்சீட்டுகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து வாக்குகளை எண்ண வேண்டும் என்றனர்.

பயிற்சி வகுப்பில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வன், நகராட்சி ஆணையாளர் பழனி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், குருசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story