குமரியில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மது விற்பனை


குமரியில் ஒரே நாளில்                      ரூ.6 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 18 Feb 2022 1:07 AM IST (Updated: 18 Feb 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலையொட்டி இறுதி கட்ட பிரசாரத்துக்கு முந்தைய நாளில் குமரியில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மதுவிற்பனையானது. பண்டிகை கால விற்பனையையும் முந்தியது.

நாகர்கோவில், 
தேர்தலையொட்டி இறுதி கட்ட பிரசாரத்துக்கு முந்தைய நாளில் குமரியில் ஒரே நாளில் ரூ.6 கோடிக்கு மதுவிற்பனையானது. பண்டிகை கால விற்பனையையும் முந்தியது.
மதுவிற்பனை
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி 17, 18, 19-ந் தேதி வரை தொடர்ச்சியாக 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையொட்டி நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் மது பிரியர்கள் போட்டி போட்டு மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக வாங்கி சென்றனர். குமரி மாவட்டத்திலும் மதுவிற்பனை அமோகமாக நடந்தது. இறுதி கட்ட பிரசாரத்துக்கு முந்தைய நாள் என்பதாலும், தொடர்ந்து மதுகடைகள் மூடப்படும் என்பதாலும் மாவட்டம் முழுவதும் உள்ள 113 டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
ரூ.6 கோடிக்கு...
நாகர்கோவில் நகரத்தில் உள்ள 33 டாஸ்மாக் கடைகளிலும் பண்டிகை காலத்தை விட அதிகமாக மதுபிரியர்கள் திரண்டதை காணமுடிந்தது. சில இடங்களில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
வழக்கமாக குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை மூலம் தினசாி வருவாயாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை கிடைக்கும். ஆனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடியே 5 லட்சத்துக்கு மது விற்பனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பண்டிகை காலத்தில் ரூ.5½ கோடி வரை மது விற்பனை நடைபெறும். ஆனால் அந்த மது விற்பனையை விட, தேர்தல் நேரத்தில் நடந்த மது விற்பனை முந்தியுள்ளது என இதன் மூலம் தெரிய வந்துள்ளது. 
தேர்தல் வெற்றியை மதுவுடன் கொண்டாடுவதற்காக அரசியல் கட்சியினர் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கியதாலும் விற்பனை அதிகரித்துள்ளது.

Next Story