பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசார் தீவிர ரோந்து
திருமங்கலம் நகராட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் நகராட்சி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திருமங்கலம் நகராட்சியில் நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக திருமங்கலம் பகுதியில் உள்ள 27 வார்டு களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில் திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு தாசில்தார், இன்ஸ்பெக்டர், போலீசார், கேமரா மேன், அரசு வாகனம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு
நேற்று ரோந்து சென்றபோது ரூ.33 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story