மலை அடிவாரத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகள்


மலை அடிவாரத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகள்
x
தினத்தந்தி 18 Feb 2022 1:34 AM IST (Updated: 18 Feb 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலை அடிவாரத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலை அடிவாரத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகளால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டு வெடிகுண்டுகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் சாலையையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனக்காப்பாளர் பொன் பிருந்தா, வேட்டை தடுப்பு காவலர் ராஜகுரு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிவப்பு நூல் சுற்றி 2 நாட்டு வெடிகுண்டுகள் கிடந்தன.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கும், கிருஷ்ணன்கோவில் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
விசாரணை
இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் கிருஷ்ணன் கோவில் போலீசார் அந்த வெடிகுண்டுகளை வாளி ஒன்றில் மண்ணுக்குள் வைத்து பாதுகாப்பாக எடுத்து வந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்துள்ளனர். இந்த வெடிகுண்டுகள் வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டதா? என விசாரித்து வருகின்றனர். மேலும் தேர்தல் சமயத்தில் கிடைத்திருப்பதால் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் வேறு யாரும் பதுக்கி வைத்து உள்ளார்களா? என்ற கோணத்திலும் கிருஷ்ணன்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 வெடிகுண்டுகள் கிடைத்த இடத்தின் அருகே வத்திராயிருப்பு சிறப்பு ஆயுதப்படை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story